நாகலாந்து மக்களுக்கு, தோளோடு தோள் நிற்போம் -மோடி

மேற்கு பருவ மழையால் கேரளாவை தொடர்ந்து நாகலாந்திலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக ஏராளமான மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து மக்களுக்கு தோளோடு தோள் நிற்போம் என அவர் உறுதியளித்துள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Exit mobile version