தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

விராட்கோலி தலைமையிலான இந்திய  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இந்நிலையில் ரோகித் ஷர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, தவானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி, நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 71 ரன்களும், தவான் 44 ரன்களும், தோனி 42 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 257 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பயர்ஸ்டோ 30 ரன்களும், வின்சி 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் இணைந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இந்நிலையில், 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோ ரூட் 100 ரன்களுடனும், மோர்கன் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

 

Exit mobile version