உதகையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில், போதிய பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் படகு இல்லமும் ஒன்றாகும். ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்து திரும்பிச் செல்கின்றனர். இதனிடையே புதிதாக துவக்கப்பட்ட தேனிலவு படகு குழாமில், தொடக்கக் காலத்தில் அதிகமான புதுமண தம்பதிகளும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் படகு சவாரி செய்து திரும்பியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த தேனிலவு படகு இல்லம் மற்றும் அதுனுள் உள்ள பூங்கா போன்றவை தற்போது முறையாகப் பராமரிப்பு இல்லாததால் மோசமான நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.