நடுக்கடலில் அலறல் சத்தம்!!படகில் புகுந்த தண்ணீர்..!

கொச்சி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த 5பேர் என மொத்தம் 7 பேர் அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் லட்சத்தீவுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். துறைமுகத்தில் இருந்து 30 நாட்டிங்கல் மைல் தொலைவில் சென்றபோது, படகில் இருந்த தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் பகுதியில் விழுந்துள்ளது. இதனால் பழுதாகி நின்ற படகிற்குள் தண்ணீர் புகுந்து மூழ்கும் நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளனர். இதனையறிந்த, அருகில் இருந்த மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்த 7 மீனவர்களையும் மீட்டனர். தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Exit mobile version