மத்திய அரசு சமீபத்தில் தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அறிவிப்பு வெளியிட்ட்து. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் அனைத்துறை அலுவலர்கள் பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்ட்த்தின் கீழ் 996 கோடி ரூபாய் அளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மற்றும் கால்வாய் வெள்ளம் பாதிப்பில்லாத வகையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் 996 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் அணைத்தும் 2019 –ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றும் கூறினார்.
Discussion about this post