துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி போராட்டம்

கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் துணை ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும், இலவச அரிசி, பொங்கல் பரிசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் முதலமைச்சர் நாராயண சாமி குற்றம் சாட்டி வந்தார்.இந்த நிலையில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

39 மக்கள் நல கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் மட்டுமே தர்ணாவில் இருந்து கலைந்து செல்வோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version