திருமலையில் ஆகஸ்ட் 9 முதல் 17 வரை தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் குடமுழுக்கு விழா வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெரும் விழாவிற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் முன்னெடுத்துள்ளது.

விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சாமியின் தரிசனத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பதியில் இருந்து திருமலை போக்குவரத்திற்கும், மலைப்பாதை பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version