திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என முதல்வர் , துணை முதல்வர் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர் அப்போது பேசிய துணை முதல்வர் தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் அ.தி.மு.கவின் கோட்டை கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்த்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வெற்றி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்றார். மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், பிரதமர் அவர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தி உள்ளோம்.
தமிழகத்தில் பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினார்.
கூட்டணி பற்றி தேர்தலே அறிவிக்காத நிலையில் எப்படி பேச முடியும்.
ஆளும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலே என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் தெரிவித்தார்.