தாமிரபரணி மகா புஷ்கரணி விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தாமிரபரணி மகா புஷ்கரணி விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.  நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கரணி விழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவில், ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இந்தநிலையில் மகா புஷ்கரணி விழா இன்றுடன் நிறைவடைவதால், அனைத்து பகுதிகளில் இருந்தும் தாமிரபரணியில் நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விழாவின் 11வது நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 35 ஆயிரத்து 361 பேர் புனித நீராடினர். கடந்த 10 நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் தாமிரபரணியில் நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version