தரகர் முதல் உரிமையாளர் வரை – தொடரும் கைது படலம்!

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில், அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு உள்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தமிழக காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா நிறுவனத்தின் இயக்குநர்கள் மாதவராவ், உமா சங்கர் குப்தா ஆகியோர் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருந்த உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்ட 2 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Exit mobile version