திரைப்படத்தை வீடியோ பதிவு செய்து விற்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் டி.ஜி.பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து விற்கும் திரையரங்குகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பெப்சி தலைவரும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினருமான ஆர்.கே.செல்வமணி சார்பில் 10க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், தமிழக டி.ஜி.பியிடம் புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிட உதவியாக இருக்கும் திரையரங்கத்தை சேர்ந்தவர்கள் மீது, காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதால், அவர்கள் எளிதில் தப்பி விடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கடுமையான சட்டத்தின் கீழ், குற்றவாளிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டி.ஜி.பி.யிடம் அளித்த புகார் மனுவில், தயாரிப்பாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.