தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்களின் போராட்டம் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கக் கோரி, தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில், அரசு மருத்துவர்கள் சங்கங்களுடன் சுமார் 8 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின், அரசு தரப்பில் மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாதகாலம் அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு, அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்தனர்.
இதனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 21 ஆம் தேதி நடைபெற இருந்த அரசு மருத்துவர்கள் போராட்டம், 4 வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.