ஊதிய உயர்வை அமல்படுத்தப்படவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடப்படுவோம் !

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தகுதிக்கேற்ப, ஊதியம் உயர்த்தி அளிக்கப்படுவது குறித்து, கடந்த 2021 ஜூன் மாதம் தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டது. அதில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் உயர்வு கிடைக்கும், என்று கூறப்பட்டிருந்து. ஆனால் அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை புதிய ஊதிய உயர்வை அமல்படுத்தாமல், விடியா அரசு காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால், மார்ச் 15ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version