11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக, 6 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, ஆயிரத்து 474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.
புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 7ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.