தமிழ்நாட்டில் நடப்பு காரிப் கொள்முதல் பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பில் 115 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நெல் அறுவடை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் கால அளவை நீட்டிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வானுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைத்தார். இதையடுத்து வரும் 30ம் தேதி வரை நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி அளித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்தியரசு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: நெல் கொள்முதல்மத்தியரசு
Related Content
ஸ்டாலினுக்கு கள நிலவரம் தெரியவில்லை - அமைச்சர் காமராஜ் விமர்சனம்
By
Web Team
October 16, 2020
விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பஞ்சாப் அரசு
By
Web Team
October 20, 2019
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அரசு
By
Web Team
July 4, 2019
மதுரையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
By
Web Team
January 2, 2019
கஜா புயல் தாக்கத்தால் சம்பா மகசூல் பாதியாக குறைவு
By
Web Team
December 27, 2018