நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அரசு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 65 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நெல் உள்ளிட்ட பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 65 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,815 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சோளத்துக்கு 120 உயர்த்தப்பட்டுள்ளது. ராகிக்கு 253 ரூபாயும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல துவரம் பருப்புக்கு 215ம் , பாசி பருப்புக்கும் 75ம், உளுந்தம் பருப்புக்கு 100ம் உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு 200 ரூபாயும் நடுத்தர பருத்திக்கு 105 ரூபாயும் நீண்ட பருத்திக்கு 100 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது.

Exit mobile version