தமிழ்நாட்டில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் சொத்து வரி உயர்த்தாமல் இருந்து வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதற்கான அறிக்கையை 2 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணை வரும் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, தற்போது வசூலிக்கப்படும் சொத்து வரியில், பெரு நகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்து வரி வசூலிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: TNGovernment
Related Content
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்
By
Web Team
December 23, 2021
துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"
By
Web Team
December 14, 2021
பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
By
Web Team
November 24, 2021
அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு - நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?
By
Web Team
November 24, 2021
அரசு அதிகாரிகள் அலட்சியம் - லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்
By
Web Team
November 17, 2021