தமிழகத்தில், காவிரிப் பாசன மாவட்டங்களில், 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குப் பல்வேறு நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்பாடு செய்துள்ளது. டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளன.
காவிரி டெல்டா படுகையில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை வராது எனவும் அவர் கூறினார்.