தனுஷைக் கண்டு அஞ்சும் ஜோதிகா…
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி. இந்த கூட்டணி ஏற்கனவே மொழி என்ற வெற்றிப்படத்தை தந்துள்ளது. இந்நிலையில் இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான துமாரி சுலு என்ற படத்தை தமிழுக்கு தக்கவாறு மாற்றி காற்றின் மொழி என்ற பெயரில் எடுத்துள்ளனர். வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் விதார்த், லட்மசுமி மஞ்சு மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற 18-ந் தேதியன்று ஆயுதபூஜை தினத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் வரும் 17-ந் தேதி வெளியாகிறது. கூடவே விஷால் நடித்துள்ள சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளன. எனவே ஜோதிகா நடிப்பில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த காற்றின் மொழி திரைப்படத்தை ஒத்தி வைக்க படத்தயாரிப்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். அடுத்தமாதம் தீபாவளிக்குப் பிறகு காற்றின் மொழி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.