தனியார் நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்த முடியுமா? – மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புது தகவல்

 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும் தனியார் நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்த முடியும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டப்பிரிவு 57 ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதனால், ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பயன்படுத்த முடியாது என்ற நிலை உருவானது. இந்த நிலையில் , உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும் வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஆதாரை இணைக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஆதார் தகவல்களை, தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் பயன்படுத்த சட்டப்பிரிவு 57 வழிவகை செய்தது. அந்த அனுமதியை மட்டுமே உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்

Exit mobile version