முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றி தரக் குறைவாக பேசிய தினகரன் ஆதரவாளர் வெற்றி வேல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரது உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த 6 ஆம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இந்நிலையில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் வெற்றிவேலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.