டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2018-19 ஆண்டிற்கான தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2018-19 ஆண்டிற்கான தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

2018-19 -வது கல்வி ஆண்டில் மீன்பதனத் தொழில் நுட்பவியல் (B.Voc Degree) பட்டப் படிப்பினை தொடங்கி உள்ளது.இந்தப் படிப்பில் சேர்வதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளமான www.tnjfu.ac.in -ல் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பூர்த்தி செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பட்டதாரிகளும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் 15.10.2018.மேலும் விரிவான விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் அறியலாம்.

Exit mobile version