சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பியவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ராயப்பேட்டையைச் சேர்ந்த இக்பால் உசேன் என்பதை கண்டிபிடித்த காவல்துறையினர் அவரை கைதுசெய்தனர். இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எஸ்எம்எஸ் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் வந்த உடனே போலீசார் பாதுகாப்பு அதிகரித்ததால் அங்குள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் வந்துள்ள எஸ்எம்எஸ் தகவலில், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவந்தது. மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராயப்பேட்டையைச் சேர்ந்த இக்பால் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் காவல் அதிகாரிகளுக்கு, குறுஞ்செய்திகளை அனுப்புவதையே இவர் வாடிக்கையாக வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.