ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குப் பதிவு

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆளுநர் ஆட்சி நடைபெறும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது.

11 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 584 வாக்குச்சாவடிகளில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைல் மற்றும் இணைய தள சேவை நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு அமைதியுடன் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version