தமிழ்நாட்டில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவு

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில், உள்ள 39 ஊராட்சிகளுக்கு கடந்த 6ம் தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 35 ஊராட்சிகளில், 12 ஆயிரத்து 341 பதவிகளுக்கு 2ம் கட்டமாக, தேர்தல் நடைபெற்றது.

மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 உள்ளாட்சிப் பதவிகளுக்கு, தற்செயல் தேர்தலும் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு முன்பு வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகளுக்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Exit mobile version