புல்லட் ரயில் திட்டத்தை நிறுத்தக்கோரி ஜப்பான் பிரதமரை , குஜராத் விவசாயிகள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான மும்பை- அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் விவசாயிகள் போராட்டம் காரணமாக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. நிலம் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விவசாய நிலம் எடுப்பு சட்டத்தை முறைகேடாக மாற்றி, குஜராத் அரசு மோசடி செய்கிறது எனவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. உயர்நீதிமன்றத்தில் ஒருபக்கம் போராட்டம் நடக்கும் நிலையில் ஜப்பானையும் நேரில் பார்வையிட விவசாயிகள் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதற்கிடையே திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதை ஐப்பான் நிறுவனம் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது. இப்போது புதிய முயற்சியாக அவர்கள் ஜப்பான் பிரதமரை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
ஜப்பான் சென்று அந்நாட்டு பிரதமர் பிரதமர் ஷின்சோ அபே, எதிர்க்கட்சி தலைவர் யோகியோ எடானாவை சந்தித்து புல்லட் ரயில் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூற உள்ளார்களாம்.