அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி மாதத்துக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதற்கான கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளில் முதற்கட்டமாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கு விளக்குமாறு, தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.