சொந்த தொகுதியில் வாக்காளர்களை சேர்க்க முடியாமல் திணறிய திமுகவினர் – ரஜினி மன்றத்தினரால் டென்ஷனான மு.க.ஸ்டாலின்

சொந்த தொகுதியில் வாக்காளர்களை சேர்க்க முடியாமல் திணறிய திமுகவினர் – ரஜினி மன்றத்தினரால் டென்ஷனான மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் நேற்று வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, ரஜினி மன்றம், அமமுக சார்பில் தனித்தனியாக வாக்காளர்களை சேர்ப்பதற்காக தொகுதி முழுவதும் முகாம் அமைத்திருந்தனர்.

இதனை பார்வையிட இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வான மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தார். அவர் சென்ற பகுதி அனைத்திலும் ரஜினி மன்றத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் இளைஞர் – இளைஞிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதே நிலைதான் தொகுதி முழுவதும் காணப்பட்டதால், ஆத்திரமடைந்த ஸ்டாலின் ரஜினி மக்கள் மன்றம் அமைத்திருந்த முகாமிற்கு சென்று நீங்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. எனவே, வாக்காளர்களை சேர்க்க கூடாது எனக்கூறி தகராறில் ஈடுபட்டார்.

ஆனால் அதற்கு ரஜினி மன்றத்தினர் வாக்காளர்களை சேர்ப்பதற்கு அரசியல் கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், யார் வேண்டுமானாலும் வாக்காளர்களை சேர்க்கலாம் என்று பதிலடி கொடுத்தனர்.

அப்போது ஸ்டாலினுடன் சென்ற திமுகவினர், ரஜினி மன்றத்திற்கு எதிராக கூச்சலிட தொடங்கினர்.

இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழல் எழுந்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும், திமுக பக்கம் கூட்டம் சேராததால், கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்டாலின் அங்கிருந்த திமுகவினரை கடிந்து கொண்டார்.

ரஜினி மன்றத்தினர் பக்கம் இளைஞர்கள் இவ்வளவு பேர் கூட்டம் சேர்க்க முடிகிறது. உங்களால் (திமுகவினர்) ஏன் முடியவில்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியதால், தொகுதி உடன்பிறப்புகள் கலக்கத்தில் உறைந்தனர். தனது சொந்த தொகுதியில் கூட வாக்காளர்களையே சேர்க்க முடியாத நிலையை பார்த்த ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார்.

இந்த நிலை தான் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் எதிர்வரும் காலத்தில் பரிசாக கிடைக்கும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது .

Exit mobile version