சேலம் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு!

 

சேலம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அனல்மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழை பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் சேலத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின்போது பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அரசின் 84 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டபணிகளையும் பார்வையிட்டார்.

Exit mobile version