சென்னைக்கு இன்று பிறந்தநாள்

நாள்தோறும் பல்வேறு பரிமாண வளர்ச்சியை கண்டு வரும் சென்னை, இன்று தனது 379வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. கடந்த 1639, ஆகஸ்ட் 22ஆம் தேதி தான், சென்னை மாநகரம் தமிழகத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில், கடந்த 2004 ஆம் அண்டு முதல் சென்னை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பு, எழும்பபூர், புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகள் கிராமங்களாக இருந்தன. அதன்பின்னர், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகரம், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவின் 4வது மிகப்பெரிய நகரமாகவும், உலகின் மிக முக்கியமான நகரமாகவும் சென்னை திகழ்வது அதன் தனிப்பெறும் சிறப்பு. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக இருக்கும் சென்னை, இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் 2இடம் வகிக்கிறது. இதனிடையே, சென்னை தினத்தின் கொண்டாட்டமாக ஆண்டு தோறும் புகைப்படக் கண்காட்சி, மாரத்தான் ஓட்டம், உணவுத் திருவிழா என பலவிதமாக சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version