ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் இரண்டு லட்சத்து 72 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணயங்கள் சரிவினை சந்தித்து வருகின்றன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு ,இந்தியபங்கு சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்துள்ளன.
டாலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 லட்சத்து 72 ஆயிரம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.