நாகை மாவட்டத்தில் சூறாவளி காற்றால் சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் செம்பனார்கோயில் பகுதியில் சூறாவளி காற்று வீசியதில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. வாழை மரங்கள், வீடுகளின் மேற்கூரையில் சேதமடைந்ததால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மின்கம்பங்களை சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார். குடிநீர் விநியோகம் செய்ய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட வீடுகள், மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.