தமிழக சுகாதாரத் துறையில் ஜப்பான் நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் உயர்தர மருத்துவ சிகிச்சைகளை, ஏழைகளும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மருத்துவ கழிவுகளை நவீன முறையில் அகற்றுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அண்டை நாடுகளில் உள்ள வசதிகளை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஜப்பானை சேர்ந்த குவாலிட்டி ஹெல்த் கேர் நிறுவனத்தின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் டயக்னாஸிஸ்ட் முறைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஜப்பானை சேர்ந்த 9 நிறுவனங்கள் சுகாதாரத் துறையில் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீரும், பப்பாளிச்சாறும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.