சீன எல்லையில் படைகளை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும், வூஹான் மாநாட்டில் ஒப்புக் கொண்டபடி, எல்லையில் அமைதியை நிலைநாட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன், அமைதி நடவடிக்கைகள் பயன்தரும் என்ற நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டார்.
படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு தனக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார். எல்லைப் பகுதியில் படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக அவர் குறிப்பிட்டார்.