முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அதிமுக அமைப்பு செய்யலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய அவர் நெடுஞ்சாலைத்துறைக்கு விடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என்றார்.
தகுதி மற்றும் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டே டெண்டர்கள் விடப்பட்டதாகவும் . பொன்னையன் கூறினார்.அதுமட்டும் அல்லாது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடுத்த ராமலிங்கம் என்பவர் முதலமைச்சருக்கு உறவினர் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றார். ரத்த உறவுகள் என்பதற்கு சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.அந்த வகையில் எந்த விதத்திலும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடுத்தவர்கள், முதலமைச்சருக்கு உறவினர்கள் அல்ல என்று பொன்னையன் விளக்கமளித்தார்.
1996,1997 மற்றும் 2001 ஆகிய காலகட்டத்தில் திமுக ஆட்சியின் போது, இதே ராமலிங்கம் என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் சுட்டி காட்டினார். மேலும் திமுக ஆட்சியில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 33 கோடி ருபாய் அளவுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது அது 10 கோடி ருபாய் என்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார்.
அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் மேல் முறையீடு செய்யப்படும் என்று பொன்னையன் குறிப்பிட்டார்.பேட்டியின் போது மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.உடன் இருந்தார் அவர் பேசும் போது, மத்திய அரசின் ஒப்பந்த புள்ளியோட மாநில அரசின் ஒப்பந்த புள்ளி குறைவானது என்று கூறினார்.