சாய்னா நேவாலின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதன் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிப்பில், அமோல் குப்தே இயக்கும் இந்தப்படத்தை பூஷன் குமார் தயாரிக்கிறார். கடந்த வாரம் படப்பிடிப்பு தொடங்கியது.

28 வயதாகும் பிரபல வீராங்கனையான சாய்னா நேவால் 20-க்கும் அதிகமான சர்வதேசப் போட்டிகளில் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.பாட்மிண்டன் வீரரான காஷ்யப்பை அவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version