“சர்கார் பட ஊழலை முதலில் ஒழிக்கட்டும் விஜய்”
சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் நடிகர் விஜயை, தளபதி தளபதி என்று கூறி முக்கியத்துவம் கொடுத்ததால் திமுகவில் கட்சி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
அதைத் தாண்டி அந்த படத்தின் விநியோகத்தில் பெரும் சர்ச்சை ஆரம்பித்துள்ளது. இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளிக்கு 120 கோடி ரூபாய்க்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை அவருக்கு கொடுக்க சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் உறவினர் ஒருவருக்கு, பத்து கோடி ரூபாய் கமிஷனாக கொடுக்கப்பட்டதாம்.
திரையுலக வட்டாரத்தில் தற்போது இதுபற்றி பரபரப்பாக பேசி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “பேட்ட” படத்திற்கு அவருக்கு சம்பளமாக நாற்பது கோடி ரூபாயை ரொக்கமாக முரளியை கொடுக்க சொல்லி இருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் படத்திற்காக தேனாண்டாள் நிறுவனம் மூலமாக ரஜினிகாந்திற்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் செய்து கொடுத்து கலாநிதி மாறன் உறவினருக்கு கமிஷனையும் கொடுத்து, 120 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாடு உரிமத்தை எப்படி விற்கமுடியும் என்று தேனாண்டாள் நிறுவன உரிமையாளர் முரளியும், அவரது வட்டாரத்தினரும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரானால் ஊழலை ஒழிப்பேன் என்று கூறிய நடிகர் விஜய், தற்போது தனது படத்தில் நடைபெறும் ஊழலை முதலில் கண்டுகொள்ள வேண்டும் என திரைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.