சமூக ஆர்வலர் நந்தினி மீது பாஜக தாக்குதல்?

மதுவின் தீமை குறித்து துண்டுப்பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினி மற்றும் அவரது தந்தையை, பாஜகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கல்லூரி சாலை, பெரியார் சிலை, பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய இருவரும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர்.

அப்போது, அங்கு வந்த பாஜகவினர், விழிப்புணர்வு பதாகைகளை கிழித்து எறிந்ததோடு, இருவரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நந்தினி மற்றும் அவரது தந்தையை யாரும் தாக்காத வகையில். காவல்துறையினர் காப்பாற்றி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, தங்களைத் தாக்கிய பாஜகவினரை கண்டித்து நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும், காரைக்குடி அண்ணா சிலை அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version