சந்தானத்தை தொடர்ந்து இவரும் 'அந்த பட்டியலில்' இணைந்தார்!

காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக மாறியது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆனால் இதில் பெரும்பலானவர்கள் கதாநாயகர்களாக வெற்றிபெற்றதில்லை. நம் மக்களின் மனநிலை அப்படி. இந்த நிலையில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் வரிசையில் யோகி பாபுவும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் ஹீரோ நம்ம யோகி பாபு. ஹீரோயின் இன்னும் தேர்வாகவில்லை. செக்யூரிட்டியாக இருக்கும் யோகி பாபு பெரும் ஆபத்து ஒன்றை தடுப்பது தான் படத்தின் கான்செப்ட். கோலமாவு கோகிலா படத்தின் ” எனக்கு கல்யாண வயசு தான் வந்திருச்சு டீ” பாடல் யோகி பாபுவை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.

அந்த பாடலால் கிடைத்த புகழ் தான் ஹீரோ என்ற அந்தஸ்தை யோகி பாபுவுக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் யோகி பாபு ஒப்பந்தமாவார் என கூறப்படுகிறது. 

Exit mobile version