கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் – பா.ஜ.க. அறிவிப்பு 

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கோவா மாநிலத்தில், ஆளும்
பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், 8 மாதங்களாக மாநிலத்தின் நிர்வாக செயல்பாடு முடங்கியுள்ளதாக கூறினார். அதனால் மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனால் பனாஜியில் நாளை நடைபெற உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படலாம் என செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய  கோவா மாநில பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் அமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். மனோகர் பாரிக்கர் முதல் அமைச்சராக தொடர்ந்து நீடிப்பார் என அவர் அறிவித்துள்ளார். 

Exit mobile version