கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை 8ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.