கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கடந்த 5 நாட்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில், இந்த வருடம் பெய்து வரும் மழையானது, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது. கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவின், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கடந்த 5 நாட்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடும் மழை பொழிவினால் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையை கருதி கேரள பல்கலைக்கழகம் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது.