கூகுள் பிளஸை நிரந்தரமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் பிளஸை நிரந்தரமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.  ஜி மெயிலில் நாம் வைத்திருக்கும் தகவல்கள் கூகுள் பிளஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்டிருந்தால் நமது புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் கூகுள் பிளஸ்ஸில் சேமிக்கப்பட்டிருக்கும். இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் தகவல் திருடப்பட்டதாக தகவல் வெளியானது. கூகுள் இந்த திருட்டை மறுக்கவில்லை. அதே நேரம் இந்த தகவலை ஒப்புக்கொண்ட சிறிது நேரத்தில் கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாதது, மிகக்குறைந்த பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் கூகுள் பிளஸ் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version