ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். முதன்முதலில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரேநாளில் 309 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். 20 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 37 போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 996 ரன்களை குவித்துள்ளார். இதனால், அவரது பேட்டிங் சராசரி 99 புள்ளி 96 ஆக உள்ளது. டான் பிராட்மேனின் இந்தச் சாதனையை தற்போதுவரை யாராலும் நெருங்க முடியவில்லை. மேலும், 29 சதங்களும், 13 அரை சதங்களும் அடித்து அசத்தி உள்ள டான் பிராட்மேன், தனது 93வது வயதில் 2001 ஆம் ஆண்டு காலமானார். இத்தகைய பெருமைக்குரிய கிரிக்கெட் வீரரின் 110வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டு, டான் பிராட்மேனை பெருமைப்படுத்தி உள்ளது.