புகழ்பெற்ற ஃபிட்பிட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது கூகுள்

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை, சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. ஃபிட்பிட் நிறுவனத்தின் கைக்கடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும். ஏற்கெனவே இத்தகைய சாதன விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வந்த கூகுள், ஃபாசில் (Fossil ) நிறுவனத்திடமிருந்து, ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்பத்தை 282 கோடி ரூபாய்க்கு அண்மையில் விலைக்கு வாங்கியது. தங்களிடமுள்ள வாடிக்கையாளர்களின் உடல்நிலை தொடர்பான தரவுகள், கூகுள் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என ஃபிட்பிட் நிறுவனம் தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version