குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. வருடந்தோறும் புரட்டாசி மாதம் நடக்கும் இந்த விழாவில் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து அம்மனை தரிசிப்பார்கள் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு யானை மீது வைக்கப்பட்டிருந்த கொடிபட்டம், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து, மூலஸ்தானத்திற்கு எதிரே அமைந்துள்ள செப்பு கொடிமரத்தில் சிம்ம உருவம் பொறிக்கப்பட்டிருந்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் காலையில் அம்பாளுக்கு திருமஞ்சனம் சாற்றுதலும், மாலையில் வீதி உலாவும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 19 -ம் தேதி நள்ளிரவில் கடற்கரையில் நடைபெற உள்ளது.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
By Web Team
- Categories: தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: newsjthiruchendur
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023