குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் – இனி சமூக விரோதிகள் தப்ப முடியாது!

யானைகவுனி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 300 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 200காமிராக்களில் ஆடியோவுடன் கூடியவையாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காமிரா பொருத்தப்பட்டுள்ள இடத்தில் நிகழும் பிரச்சினைகளை நேரடியாக கண்காணித்து சரிசெய்ய முடியும். மேலும் அந்த பகுதி முழுவதும் மின் தடைப்பட்டாலும் யுபிஎஸ் உதவியுடன் காமிராக்கள் தொடர்ந்து நேரலையிலேயே கண்காணிக்கப்படும். 137 இடங்களில் 300 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் குறைந்தது 7 காமிராக்களில் பதிவு செய்யப்படுவார். இந்த காமிராக்கள் பொருத்தப்பட்ட தினத்திலிருந்து இதுவரை எவ்வித குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என்று யானைகவுனி காவல் ஆய்வாளர் தெரிவித்தார். இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் முழுமையாக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்பு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version