கூட்டுறவுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஜெனரிக் மருந்தகங்கள் திறக்கப்படும் என அத்துறைக்கான அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது , அனைத்து விவசாயிகளுக்கும் தங்குதடையின்றி உரம் வங்குவதற்காக, ஒரு லட்சத்து 65 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறைந்த விலையில் தரமான ஜெனரிக் மருந்துகளை பொதுமக்கள் பெற்று பயனடையும் வகையில் அரசு திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஜெனரிக் மருந்தகங்களை கூட்டுறவுத் துறை தொடங்கியுள்ளது. இதனை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து
மாவட்டங்களிலும் ஜெனரிக் மருந்தகங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.