குண்டேரி பள்ளம் ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அடுத்த கொங்கர் பாளையத்தில் 103 கோடி ரூபாய் மதிப்பில் குண்டேரி பள்ளம் கூட்டு குடி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 கிராமங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை சிறப்பாக செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.