குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி அவருக்கு பூங்கொத்து மற்றும் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த வாழ்த்து கடிதத்தில், நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன் வாழ்ந்து மக்களுக்கு பணியாற்ற இறைவனை வேண்டுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.